News April 15, 2025
அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி!

அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?
Similar News
News January 20, 2026
ஐநாவுக்கு செக் வைக்க முயலும் டிரம்ப்

ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த அமைப்புக்கு டிரம்ப் தலைமையேற்றுள்ள நிலையில், இதில் ₹9000 கோடி கட்டணம் செலுத்தி மற்ற நாடுகள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வரை அந்த அமைப்பில் இருக்கலாம் எனவும் அமெரிக்கா விளக்கியுள்ளது.
News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
News January 20, 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

ஜப்பானில் பொதுத்தேர்தல் பிப்.8-ல் நடக்கும் என அந்நாட்டு PM சனே டகாய்ச்சி அறிவித்துள்ளார். அதிகரித்த செலவினம், வரி குறைப்பு & ஜப்பானின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக தான் எடுக்கும் முடிவுகளுக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு ரிஸ்க் என்ற அவர், ஜன.23-ல் ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


