News April 15, 2025
காதலியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கொடூரம்

அடுத்தடுத்த அரிவாள் வெட்டு சம்பவங்கள் தென் மாவட்டங்களை அதிரச் செய்துள்ளன. பாளையங்கோட்டையில் பள்ளிக்குள் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. காதலியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டு காதலித்த பெண், திடீரென பேசாமல் ஒதுங்கியதால் அவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.
Similar News
News February 24, 2026
திருப்பரங்குன்றம் வருகிறார் PM மோடி

சட்டப்பேரவை தேர்தலையொட்டி TN வரும் PM மோடியின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. பிப்.28-ம் தேதி இரவு சென்னை வரும் அவர், மார்ச் 1-ம் தேதி புதுச்சேரி அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மதுரை செல்லும் அவர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் வழிபாடு செய்கிறார். திருப்பரங்குன்ற தீபத்தூண் விவகாரம் ஏற்கனெவே சர்ச்சையாகியுள்ள நிலையில், அங்கு மோடி வழிபாடு செய்யவுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
News February 24, 2026
ஜிம்பாப்வேவுக்கு எதிராக ரிங்கு சிங் விளையாடுவாரா?

வரும் 26-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை, இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய அணி சென்னை வந்தடைந்த நிலையில், ரிங்கு மட்டும் இதுவரை அணியில் இணையவில்லை. அவரது அப்பாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 24, 2026
US வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்க: ராகுல் காந்தி

அமெரிக்கா <<19196080>>SC தீர்ப்பை சுட்டிக்காட்டி<<>>, US உடனான வர்த்தக ஒப்பந்தத்தை PM மோடி ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதை PM செய்ய மாட்டார் என தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் இதயத்தில் பாய்ந்த அம்பு எனவும் விமர்சித்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் & அதானியை காப்பாற்றுவதற்காக டிரம்ப் கொடுக்கும் அழுத்தத்தால் மோடி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் சாடியுள்ளார்.


