News April 15, 2025

ரெய்டுக்கு பயந்தே பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி: முத்தரசன்

image

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதாக CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுகவினர், திடீரென அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

பிக்பாஸில் களமிறங்குகிறாரா திருநங்கை ஜீவா?

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், சிலர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மீண்டும் ஒரு திருநங்கை போட்டியாளர் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா போட்டியாளராக களமிறங்குகிறாராம்.

News October 28, 2025

National Roundup: டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்

image

*நாளை மும்பைக்கு செல்கிறார் PM மோடி.
*மொன்தா புயல்: பாஜகவினர் களத்தில் பணியாற்ற JP நட்டா அறிவுறுத்தல்.
*டெல்லி ஆசிட் வீச்சு: பெண்ணின் தந்தை கைது.
*பஞ்சாப்பில் ஒரே நாளில் 147 தீ விபத்துகள் பதிவு.
*மொன்தா புயல் எதிரொலி: ஆந்திர பயணிகளுக்கு இண்டிகோ அலர்ட்.
*சத் பூஜையின் போது கங்கையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.

News October 28, 2025

இந்திய கிரிக்கெட்டை துரத்தும் சோகம்

image

காயம் காரணமாக, பிரதிகா ராவல் மகளிர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, 2023 ODI ஆடவர் உலகக் கோப்பையின் போதும், வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். 2019 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வீரர்களின் இந்த விலகல்கள், ரசிகர்களின் மனதை பெரும் காயங்களாக மாறியுள்ளது.

error: Content is protected !!