News April 15, 2025
மயிலாடுதுறையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் மயிலாடுதுறையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூம்புகார், 2. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரை, 3. திருமுல்லைவாசல், 4.கீழபெரும்பட்டினம், 5.சீர்காழி, 6.பழையார் கடற்கரை, 7. திருவெண்காடு, 8.அனந்தமங்கலம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க
Similar News
News April 17, 2025
மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News April 17, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.