News April 15, 2025

Ghibli க்கு நோ சொல்லுங்க; சேலம் சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

Ghibli-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

Similar News

News April 30, 2025

ரூ.6,000 ஊக்கத்தொகையுடன் சேலத்தில் இலவச பயிற்சி

image

சேலம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் சார்பில் இலவச சாஃப்ட் ஸ்கில் (Soft skills) பயிற்சி வகுப்புகளை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் 20 நாட்களில் நேர்காணல்களில் பங்கேற்பதற்கான திறன்களைப் பெற முடியும். மேலும், பயிற்சி முடிவில் ரூபாய் 6,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9500980430, 9443207802 என்ற எண்களை அழைக்கலாம்.

News April 30, 2025

இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

image

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News April 30, 2025

இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

image

சேலம் அருகே எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(21). சீலநாயக்கன்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி, ஏரிக்கரையில் 4 பேர் சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் மதன், குரு, பிரசாத் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!