News April 15, 2025

புதுக்கோட்டையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் FIELD SALES EXECUTIVE பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு. ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும், இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யவும்

Similar News

News December 2, 2025

புதுகை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

image

அறந்தாங்கியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொ) மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 2, 2025

புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

image

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 2, 2025

புதுக்கோட்டை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி

image

ஆலங்குடி அடுத்த கலிபுல்லா நகரை சேர்ந்தவர் கணேசன் (75). இவர் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி ஐயப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதியதில், படுகாயமடைந்த அவர் புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!