News April 15, 2025
பெண் வாக்காளர்களை கவர விஜய் புது வியூகம்!

2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக பெண் ரசிகர்களை வாக்காளர்களாக மாற்ற விஜய் வாய்ஸில் செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வாக்கு சேகரிக்க திட்டம் தீட்டி அதற்கான பணிகள் நடக்கிறது.
Similar News
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. ECI முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பிப்.11-ல் தமிழகம் வரவுள்ளனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
4 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. நடிகை ரவீனா ரவி வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக சபரீஷ் மற்றும் அவரது சகோதரர் தன்னை தொந்தரவு செய்வதாக நடிகை ரவீனா ரவி பதிவிட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அநாகரீகமாக மெசேஜ்ஜின் Screenshot-ஐ பதிவிட்டு, தன்னை மட்டுமின்றி வேறு சில நடிகைகளையும் இவர்கள் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான சென்னையில் இருக்கும் இவர்கள் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 5, 2026
விஜய் என்றால் அனைவருக்கும் பயம்: செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைப்பதால்தான் தவெக உருவாக்கப்பட்டு வீரநடை போட்டு வருகிறது என KAS கூறியுள்ளார். விஜய்யிடம் இஞ்சினே இல்லை என அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த அவர், விஜய்யை பார்த்து எல்லாருக்கும் பயம் வந்துவிட்டதால்தான் இப்படிபட்ட விமர்சனம் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே பயத்தில்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை EPS வெளியிடுவதாகவும் பேசியுள்ளார்.


