News April 15, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிராமங்களில் தங்கி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (ஏப்.16) நடைபெறவுள்ளது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தும் மனுக்களை பெறவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
பெரம்பலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

பெரம்பலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 8, 2026
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க, மாவட்ட மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் 06 வட்டாரங்களில், காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகிற பிப்.16ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மேலாண்மை அலகு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி, மங்கூன், ஈச்சங்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.09) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து பேரளி, கல்பாடி, அசூர், அடைக்கம்பட்டி, மேலப்புலியூர், மாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!


