News April 15, 2025
கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.
Similar News
News April 18, 2025
திருவள்ளூர்: இருதய நோயை குணப்படுத்தும் கோவில்

திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்
News April 18, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள்

கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் ரூ.23 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். காக்களூர், தாமரைக்குளத்தில் ரூ.2 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும். பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும். திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தபடும் என CM தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <