News April 15, 2025
9 செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால்….

9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.
Similar News
News August 22, 2025
GALLERY: நம்ம ஊரு மெட்ராஸூ..!

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்கிற மெட்ராஸ் மாநகருக்கு வயது 386. சென்னை என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச்சும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் தான். ஆனால், சென்னையில் இவற்றை போலவே பல Iconic இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு சென்னை என்றால் உடனே ஞாபகம் வருவது என்ன?
News August 22, 2025
பாசிஸ்ட்டுகளை பார்த்து சிலர் பம்முகிறார்கள்: உதயநிதி

TN அரசியலில் சில அடிமைகள் பாசிஸ்ட்டுகளை பார்த்து பம்முகிறார்கள் என DCM உதயநிதி காட்டமாக பேசியுள்ளார். சென்னையில் Ex அமைச்சர் ரகுமான்கான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரகுமான்கான் எழுதிய ‘மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை’ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், சிலர் இன்று டெல்லிக்கு அடிமைகளாக இருப்பதாக மறைமுகமாக விமர்சித்தார்.
News August 22, 2025
Specified Employee வருமான வரி விலக்கில் மாற்றம்

Specified Employee-ன் வருமான வரம்பு ₹50,000-லிருந்து ₹4 லட்சமாக உயர்த்தி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வகை ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கும் வட்டியில்லா கடன், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கு இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கை பெறுவதற்கான வருமானம் ₹2 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.