News April 15, 2025
2 பிரிவுகளாகச் செயல்படும் RLJP கட்சி

<<16101772>>RLJP<<>> கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு 2 பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமை வகிக்கிறார். இன்னொரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமை தாங்குகிறார். இதில் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் முன்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
Similar News
News December 26, 2025
திருப்பூர் அருகே விபத்து: பெண் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், வீரலட்சுமி என்பவருடன் இருசக்கர வாகனத்தில், சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில், செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வந்த வீரலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
News December 26, 2025
தங்கம் விலையை குறைக்க களத்தில் குதித்த பெண்கள்!

உண்மைதான்.. அரியலூர், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் தாலிக்கயிறை கையில் வைத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி விலை உயர்ந்து கொண்டே சென்றால் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், தங்க விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உங்கள் கருத்து என்ன?
News December 26, 2025
BREAKING: விஜய் கட்சி சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவிற்கு என்ன சின்னம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தவெக வழங்கியிருந்தது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ’அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு. ஆனால் இப்போது சொல்லமாட்டோம்’ என KAS பேசியது குறிப்பிடத்தக்கது.


