News April 15, 2025
இனிய நண்பர் கேப்டன்: மோடி

சமூக நன்மைக்காக கேப்டன் விஜயகாந்த் பல விஷயங்கள் செய்துள்ளதாக பிரதமர் மோடி X போஸ்ட் செய்துள்ளார். மோடி குறித்த ஆவணப்படம் ஒன்றில், விஜயகாந்துக்கும் மோடிக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக பிரேமலதா பேசியிருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் மோடி, தனது இனிய நண்பர் விஜயகாந்துடன் பல ஆண்டுகள் கலந்துரையாடி, நெருக்கமாக பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார்.
Similar News
News February 3, 2026
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

சென்சார் போர்டு, CBI வைத்து விஜய்க்கு பாஜக நெருக்கடி தருகிறது என திணிக்கப்படும் கருத்து உண்மையில்லை என வானதி கூறியுள்ளார். எத்தனையோ படங்கள் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருப்பதாக கூறிய அவர், ஜன நாயகன் மீது மட்டும் என்ன தனியான பார்வை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் சான்றிதழ் பெற ஒரு நடைமுறை இருக்கிறது எனவும் அதை கடைப்பிடிக்க வேண்டியது அவர்களின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
தங்க பெண்ணை பாராட்டிய ரஜினி!

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை, நடிகர் ரஜினி நேரில் அழைத்து பாராட்டியுள்ளர். மேலும், பத்மாவின் தங்கமான குணத்தை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து, தங்க செயின் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். சென்னை தி.நகரில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா வேலை செய்து கொண்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
வானதிக்கு அழுத்தம் கொடுக்கிறாரா SP.வேலுமணி?

கோவை தெற்கின் சிட்டிங் MLA-வாக இருக்கும் வானதியை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுமாறு SP.வேலுமணி அழுத்தம் கொடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. 2016-ல் கோவை தெற்கில் அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், 2021-ல் வானதி அத்தொகுதியை கேட்கவே, அம்மன் அர்ஜுனன் வடக்கில் போட்டியிட்டார். எனவே, வரும் தேர்தலில் அம்மன் அர்ஜுனனை மீண்டும் தெற்கில் நிற்க வைக்க SP.வேலுமணி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.


