News April 14, 2025

1252 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

நாகை அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் இன்று அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் 1252 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக ரூ.31 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Similar News

News April 16, 2025

வேதாரண்யத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் முருகமணி மனைவி கல்பனா என்ற பெண் தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னே சென்ற டூவீலர் திடீரென பிரேக் அடித்ததில் அந்த வண்டியின் மீது மோதி டூவீலர் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கல்பனா மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 15, 2025

திருக்குவளைக்கு 16ஆம் தேதி ஆட்சியர் விசிட்

image

திருக்குவளை வட்டத்தில் 16.4.2025 அன்று உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை திருக்குவளைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருகை தருகிறார். அப்போது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

26 துணை அஞ்சலகங்களில் ஆதார் முகாம்

image

நாகை மற்றும் திருவாரூர் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் 26 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!