News April 14, 2025

எடைகுறைப்பு மருந்து இப்போதைக்கு இல்லை

image

உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer, தாங்கள் ஆய்வு செய்து வந்த உடல் எடைகுறைப்பு மருந்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. Danuglipron என்ற பெயர் கொண்ட அந்த மருந்தினால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதால், அதன் ஆய்வு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எடைகுறைப்பு மருந்துகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால், முன்னணி நிறுவனங்கள் அந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Similar News

News October 27, 2025

உலகின் மிகவும் பிரபலமான ஓவியங்கள் இதோ!

image

மனிதனின் ஆழமான எண்ணங்களை காகிதத்தில் வண்ணம் பூசி உயிர்பெற செய்யும் அதிசயமே ஓவியங்கள். டாவின்சி, வான்கோ, பிகாசோ என பல கலைஞர்கள் இந்த கலையை தங்களுக்கு சொந்தமாக்கி, உலகுக்கு பல அழியாத ஓவியங்களை தந்து சென்றுள்ளனர். அப்படி உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற, இன்றும் உயிர்ப்போடு இருக்கும் சில ஓவியங்களை காண மேலே ஸ்வைப் பண்ணுங்க…

News October 27, 2025

BREAKING: கூட்டணியை உறுதி செய்தார் CM ஸ்டாலின்

image

நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும், காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில், காங்., நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் இல்ல திருமண விழாவில் பேசிய அவர், தன்னை மூத்த அண்ணனாக ராகுல் காந்தி ஏற்று கொண்டு இந்தியாவின் குரலாக ஒலிப்பதாக தெரிவித்தார். ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட்டு என திமுக, காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News October 27, 2025

‘சார்பட்டா பரம்பரை 2’: அப்டேட் கொடுத்த ஆர்யா!

image

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி OTT-யில் நேரடியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’, ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி, பணிகள் தொடங்காமலேயே இருந்தது. ஆர்யா, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த படம் முடிந்ததும், ‘சார்பட்டா பரம்பரை 2’-க்கான பணிகள் தொடங்கும் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!