News April 14, 2025
லோன் வாங்குபவர்கள் ஹேப்பி: வட்டியை குறைத்தது SBI

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் <<16065106>>கடன்கள் <<>>மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அந்த வரிசையில், SBI வங்கியும் தான் வழங்கும் கடன்களுக்கான வட்டியை ஏப்.15 முதல் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் லோன் வாங்குபவர்கள் பயனடைவர். அதேநேரம், டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டியையும் 10-25 புள்ளி SBI குறைத்துள்ளது.
Similar News
News September 19, 2025
பிரபாஸ் VS தீபிகா ரசிகர்கள் இடையே வார்த்தை போர்

<<17750330>>‘கல்கி 2’ <<>>படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீபிகா, பிரபாஸ் ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் போர் வெடித்துள்ளது. ஷூட்டிங் நேரத்தை குறைக்க சொல்லி, கமிட்மெண்ட் இல்லாமல் இருந்தது தான் தீபிகா வெளியேற்றத்திற்கு காரணம் என பிரபாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கர்ப்பிணியாக இருந்த போது ‘கல்கி 1’-ல் நடித்த தீபிகாவின் கமிட்மெண்ட் பற்றி பேச தகுதியில்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
News September 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 19, புரட்டாசி 3 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News September 19, 2025
பாலியல் வழக்கில் சமிர் மோடி கைது

முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியின் தம்பி சமிர் மோடி டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவருக்கு சமிர் மோடி, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமீர் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பணம் பறிப்பதற்காகவே புகாரளிக்கப்பட்டுள்ளதாக சமிர் மோடி தரப்பு கூறுகிறது.