News April 14, 2025
அம்பேத்கர் பெயரை பேச மட்டும் செய்கிறார் மோடி: கார்கே

மோடி அரசு, அம்பேத்கர் பெயரை பேச்சளவிற்கே பயன்படுத்துகிறது, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை என்று மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். தலித்துகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருப்பதாகவும், அதை மோடி அரசு பின்பற்றுவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அவமதிக்கப்படுகையில், பிரதமர் மோடி மவுனம் காப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 20, 2026
தமிழக காங்கிரஸில் விரிசலா?

TN காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 30 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியில் பங்கு என தொடர்ந்து குரல் எழுப்பிய MP மாணிக்கம் தாகூரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், TN காங்கிரஸில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
News January 20, 2026
‘ஆமா, என் மனைவியை நான் தான் கொன்றேன்’

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்ராந்த் தாகூர் குடும்ப தகராறில் தனது மனைவியை(36) கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், ‘ஆம், என் மனைவியை நானே கொலை செய்தேன். ஆனால், உள்நோக்கத்தோடு கொலை செய்யவில்லை’ என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு நடந்துவிட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். உடற்கூராய்வு முடிவு கிடைத்தவுடன் கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது.
News January 20, 2026
இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN கண்டதில்லை: SP

சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு களங்கத்தை கவர்னர் RN ரவி ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், மரபுப்படி தேசிய கீதம் இறுதியில் பாடப்படும் என சபாநாயகர் கூறியும் கவர்னர் ஏற்கவில்லை என்றும், மைக் ஆஃப் செய்யப்பட்டது என அப்பட்டமாக பொய் பேசும் இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN சட்டமன்றம் இதுவரை கண்டதில்லை எனவும் SP வேதனை தெரிவித்துள்ளார்.


