News April 14, 2025

பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

image

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

Similar News

News November 11, 2025

‘ரோடு ஷோ’.. அவகாசம் கோரிய தமிழக அரசு

image

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கில் TN அரசுக்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. TN அரசு ஒரு மாத காலம் அவகாசம் கோரிய நிலையில், மெட்ராஸ் HC நவ.20-ம் தேதி வரை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில், கட்சிகளுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும், 15 நாள்களுக்கு முன்பாக அனுமதி கோரினால் 5-7 நாள்களில் முடிவெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News November 11, 2025

BREAKING: தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம்

image

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை தொடரலாம் என SC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR மேற்கொள்வதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக 2 வாரத்தில் ECI பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும். SIR-க்கு ஆதரவாக இந்த வழக்கில் அதிமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க SC மறுப்பு தெரிவித்துள்ளது.

News November 11, 2025

வகை வகையான கார்கள் பார்க்க ஆசையா?

image

காலத்தால் அழியாத பொறியியல் நேர்த்தியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கார்களுக்கு இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கார்களுக்கென தனி அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்கெல்லாம் இந்த விண்டேஜ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் இங்கே சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க.

error: Content is protected !!