News April 14, 2025
டோல்கேட் இல்லை.. FASTag முறை ரத்து.. வரப்போகும் மாற்றம்!

டோல்கேட் வசூலில் மத்திய அரசு புதிய டெக்னாலஜியை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டோல்கேட்டோ FASTag முறையோ இனி இருக்காதாம். அனைவரும் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களுக்கு தயாராகிக் கொள்ள வேண்டும். பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுமாம். இதனால், அதிக கட்டணத்தை தவிர்க்கலாம். டோல்கேட்டில் காத்திருக்கும் சூழல் இருக்காது. சூப்பர்ல!
Similar News
News November 6, 2025
சற்றுமுன்: திமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்

2026 தேர்தலில் வாய்ப்பு இருந்தால், திமுக கூட்டணியில் போட்டியிடுவோம் என்று, தனியரசு தெரிவித்துள்ளார். 2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து MLA ஆனவர் தனியரசு. சமீபமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் இவர், இன்று CM ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த அவர், பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படும் அதிமுக, மேற்கு மண்டலத்தில் வலுவாக இல்லை என்றும் விமர்சித்தார்.
News November 6, 2025
இதெல்லாம் காலக் கொடுமை: சீமான்

நாட்டிலேயே மதுபானத்துக்கு ’வீரன்’ என பெயர் வைத்து, அதை டாஸ்மாக்கில் விற்பனை செய்தது தமிழ்நாட்டில் மட்டுமே தான் என சீமான் விமர்சித்துள்ளார். இவையெல்லாம் பைத்தியக்காரத் தனமாக இருப்பதாக கூறிய அவர், வீரன் என்ற பெயரை TN அரசு இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதை காலக்கொடுமை என சுட்டிக்காட்டிய அவர், தமிழ் வளர்க்கும் மாநிலமா இப்படி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 6, 2025
BREAKING: 4-வது T20.. இந்தியா பேட்டிங்

இந்திய அணிக்கு எதிரான 4-வது T20-யில் டாஸ் வென்ற ஆஸி., அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. 3-வது போட்டியில் விளையாடிய அணியே தொடருகிறது. பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.


