News April 14, 2025
4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.
Similar News
News April 16, 2025
JEE விடைக்குறிப்புகள்.. NTA விளக்கம்

JEE (முதன்மை) அமர்வு-2-க்கு பதிவேற்றப்பட்ட விடைக்குறிப்புகள் தற்காலிகமானவை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. JEE இறுதி விடைக்குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்புகள் மட்டுமே மதிப்பெண்களை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. JEE (முதன்மை) அமர்வு-2-க்கான விடைக்குறிப்பில் பிழைகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
10th மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

மார்ச் 28ஆம் தொடங்கிய 10ஆம் வகுப்பு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், அதிகாரப்பூர்வமாக இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தேர்வு முடிந்த குஷியில் மாணவர்களும், பெற்றோர்களும் வெளியூர் செல்லும் பயணத் திட்டத்தை தயார் செய்ய தொடங்கியுள்ளனர். மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை ஜாலியாக ஊர் சுற்றுங்கள்.
News April 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள் அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்.