News April 14, 2025
ஆணவக் கொலை: CM-க்கு அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என CM ஸ்டாலினுக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர், தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சமூக நீதி இருக்கும் வரை நம்மை யாராலும் பிரித்தாள முடியாது என்றும் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
Similar News
News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வரலாற்றில் இன்றைய தினம்

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)
News April 16, 2025
வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.