News April 14, 2025
தூய்மை பணியாளர்களை இரவு நேரங்களில் பணி செய்ய நிர்பந்தம்

தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர்களை இரவு நேரங்களில் பணியாற்ற நிர்பந்திப்பதை தடுக்கக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் “ பெண் தூய்மைப் பணியாளர்கள் இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்
Similar News
News September 18, 2025
தருமபுரி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

தருமபுரி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 18, 2025
தர்மபுரியில் நூதன மோசடி… உஷார்!

பென்னாகரம் ஏரியூர் பகுதியில் அசோக் என்ற இளைஞருக்கு 8046852000 என்ற எண்ணில் இருந்து கால் வந்தது. யூபரில் இருசக்கர வாகனம் மூலம் ரைடர்ராக பணியை தொடங்கி மாதத்திற்கு 40 முதல் 60 ஆயிரம் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறி பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் கட்ட வேண்டி இருப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர். யூபர் செயலில் பணிபுரிய முன்பணம் தேவையில்லை. இது போன்ற மோசடிகளில் ஏமாந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
News September 18, 2025
தருமபுரி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

தருமபுரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!