News April 3, 2024
APPLY NOW: 9,144 காலிப் பணியிடங்கள்

நாடு முழுவதும் காலியாக உள்ள 9,144 தொழில்நுட்பாளர் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,100 முதல் தர டெக்னீஷியன் பணிகளுக்கு 18-33 வயதினரும், 7,900 3ஆம் தர டெக்னீஷியன் பணிகளுக்கு 18-36 வயதினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 08. மேலும் தகவலுக்கு <
Similar News
News April 20, 2025
ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு – காஷ்மீரில் 3.1 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தஜிகிஸ்தான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். அண்மை காலமாக ஆசிய கண்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
News April 20, 2025
ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரர்கள்..!

ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் களமிறங்கி கவனம் பெற்றிருக்கிறார் RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14 ஆண்டு 23 நாள்கள்). இந்த பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக பிரியாஸ் (16 ஆண்டுகள் 157 நாள்கள்), முஜிப் உர் ரஹ்மான் (17 ஆண்டுகள் 11 நாள்கள்), ரியான் பராக் (17 ஆண்டுகள் 152 நாள்கள்), சர்ஃபராஸ் கான் (17 ஆண்டுகள் 177 நாள்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். 14 வயதில் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
News April 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 311 ▶குறள்: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும், அதன் பொருட்டுப் பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.