News April 14, 2025
திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News July 6, 2025
VAO வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
செங்கல்பட்டில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.வரும்செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை(044-27427417,27427418)தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962666>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
தாம்பரத்தில் இன்று மின்தடை ஏற்படும்

தாம்பரத்தில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கீழே வரும் பகுதிகளில் கரண்ட் கட். தாம்பரம், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நாகா, அன்சா கார்டன். பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.