News April 14, 2025
விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 6, 2025
ராணிப்பேட்டை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

ராணிப்பேட்டையில் இன்று (ஆக.06) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி: ஆற்காடு, அரக்கோணம், காவேரிப்பாக்கம், சோளிங்கர், திமிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பேர விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தக்கோலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆகஸ்ட் 7 தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100