News April 14, 2025
புதுவை மின்துறையில் வேலைவாய்ப்பு

புதுவை மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. GEN – 76, MBC -31, SC – 28 ,OBC -19, EWS – 17, BCM – 2, EBC -2, ST -1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 1, என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News August 5, 2025
புதுவையில் 182 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கல்

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீசாருக்கு பல்வேறு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது 32 போலீசாருக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், 150 போலீசாருக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
News August 5, 2025
புதுவை: ரயில்வேயில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

புதுவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் எழுத்தர், ரயில் கிளார்க், டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 30,000க்கும் மேலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது. +2 மற்றும் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆக.30 முதல் செப். 29_க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். ரயில்வே துறையில் பணியில் சேர காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பை SHARE பண்ணுங்க!
News August 5, 2025
புதுவை: 10% இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு

புதுச்சேரியில் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.04) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.