News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News August 6, 2025

அதிமுக முன்னாள் MLA துரை.அன்பரசன் காலமானார்

image

அதிமுக EX MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 – 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக இருந்தார். தென்னாற்காடு மாவட்ட அதிமுக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

News August 6, 2025

மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் முடக்கம்: சசி

image

தொழில் நிறுவனங்களுக்கு ஜெ., ஆட்சிக்காலத்தில் ₹30 என்று இருந்த நிலைக்கட்டணம் திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். 50 கிலோவாட் வரை ₹162/KW, 112 கிலோவாட் வரை ₹330/KW, 112 கிலோவாட்-க்கு மேல் ₹608/KW என உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயர்வால், தற்போது சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திமுக கூட்டணியில் தேமுதிக?.. இன்று ஸ்டாலின் முக்கிய முடிவு

image

திமுக கூட்டணி தலைவர்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தொகுதிப் பங்கீடு, தேர்தல் பரப்புரை, கூட்டணியில் இணையபோகும் புதிய கட்சிகள் குறித்து ஆலோசிக்கும் ஸ்டாலின், தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கருத்துக் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. 9+1 ( ராஜ்யசபா) சீட் வரை தேமுதிகவுக்கு கொடுக்க திமுக உறுதியளித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று ஸ்டாலின் முக்கிய முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!