News April 14, 2025
சிஎஸ்கேவில் களமிறங்கும் 17 வயது வீரர்?

சிஎஸ்கே கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: CPI

ஜனநாயகத்திற்கு பேராபத்தான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது இலக்குக்காகவே திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம் என CPI வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பது தங்கள் கொள்கை முடிவல்ல; அதேசமயம் இரட்டை இலக்க சீட்களை கேட்டு பெறுவோம் என்றும், கட்சிகளுக்கு இடையேயான மாற்று கருத்துகள் கொள்கை பலம் கொண்ட திமுக கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் <<19094222>>www.tnpsc.gov.in www.tnpscexams.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலம் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
News February 11, 2026
கோழிக்கறி சாப்பிடும் போது உஷார்!

கோழி இறைச்சி பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும், அதன் சில குறிப்பிட்ட பாகங்களை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோழியின் நுரையீரல் பகுதியில் ஒட்டுண்ணிகள் இருக்கக்கூடும்; கோழியின் தீவனத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தால், அதன் தலையில் நச்சுக்கள் தேங்கியிருக்கும்; அதேபோல், கோழியின் கால்களில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இவை உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.


