News April 14, 2025
குரூப்–1 தேர்வில் விவசாயி மகள் சாதனை: பாராட்டிய அமைச்சர்

குரூப் – 1 தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகளுக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார். கடலூர், வாழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவசாயி கலைச்செல்வனின் மகள் கதிர்செல்வி, கடந்த ஆண்டு குரூப்–1 தேர்வு எழுதினார். அண்மையில் இதன் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதித்தார். இதையடுத்து மாணவியை அழைத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டினார்.
Similar News
News February 7, 2026
பாஜகவிடம் பணம் வாங்கிய சீமான்: மன்சூர் அலிகான்

நாதகவில் சொந்த காசை போட்டு மாடு போல் உழைத்த தன்னை சீமான் ஏமாற்றிவிட்டதாக மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார். தான் பதவிக்கும், லாபத்துக்கும் ஆசைப்படாதவர் எனக் குறிப்பிட்ட மன்சூர், சீமான் தன்னை பாஜகவிடம் அடகுவைத்து பணம் பெற்றதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாதக சார்பாக திண்டுக்கல்லில் மன்சூர் அலிகான் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
T20 WC: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

டி20 உலகக் கோப்பையில் இன்று குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன. மிகவும் வலுவான அணியாக திகழும் இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்த USA புது யுக்திகளுடன் களமிறங்கவுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு மும்பை வான்கடேவில் தொடங்குகிறது.
News February 7, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. இந்நிலையில், இன்று(பிப்.7) 1 அவுன்ஸ் $300 (இந்திய மதிப்பில் ₹27,172) உயர்ந்து $4,966-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


