News April 14, 2025

பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -25ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டியல் பயிற்சி சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 16ம் தேதி முதல் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே 6ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

நீலகிரி: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️ நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. ▶️முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. ▶️வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. ▶️வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. ▶️வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

image

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News April 20, 2025

நீலகிரியில் குறைகளைக் களையும் குமரன்!

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். SHARE செய்யவும்.

error: Content is protected !!