News April 14, 2025
நினைத்ததை நிறைவேற்றும் வதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

மயிலாடுதுறையில் அமைந்துள்ளது அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி அமாவாசை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை, கடன் பிரச்சனை, குழந்தை பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டில் இங்கு சென்று வேண்டினால் நினைத்தது நடக்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 21, 2025
மயிலாடுதுறை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவுள்ளனர். மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை சேர் பண்ணுங்க.!
News August 21, 2025
ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று(ஆக.20) இரவு 11 மணி முதல் இன்று(ஆக.21) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.