News April 14, 2025

பிரபல கன்னட காமெடி நடிகர் மரணம்!

image

பிரபல கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்தன் (75) காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூரு மணிபால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 1948-ல் பிறந்த ஜனார்தன், பேங்க்கில் பணியாற்றி, பின்னர் திரைத்துறைக்கு வந்ததால், அந்தப் பெயர் அவருக்கு வந்தது. தர்லே நன் மகா, கணேஷ் சுப்ரமணியா என 500–க்கும் மேற்பட்ட படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். #RIP

Similar News

News April 18, 2025

தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

image

கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 18, 2025

குறையாத மழை.. என்ன நடக்கும்?

image

பெங்களூருவில் நடைபெறவிருந்த RCB, PBKS இடையேயான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகியிருக்கிறது. இன்னமும் மழை தொடர்வதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர். இரவு 10.54 மணிக்கு போட்டியை தொடங்கினால் கூட 5 ஒவர் போட்டியாக இது நடைபெறும். அதனை மீறினால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்தளிக்கப்படும்.

News April 18, 2025

FACT CHECK: UPI-க்கு GST?

image

₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!