News April 14, 2025

பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News January 3, 2026

தி.மலையில் குழந்தை வரம் அருளும் அற்புதக் கோயில்!

image

தி.மலை மாவட்டம் இஞ்சிமேடு பகுதியில் மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. நவபாஷாண லிங்கமாக அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 3, 2026

தி.மலை: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளத்தில் வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

தி.மலை: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

தி.மலை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!