News April 14, 2025
திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!.. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News January 5, 2026
திருவாரூர்: ஜாமீனில் வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல்

பேரளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி வஸ்தராஜபுரம் பகுதியில் மகேஷ் என்பவர் மீது இட பிரச்சனை தொடர்பாக, சரவணன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் FIR போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த மகேஷை நேற்று இரவு சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் முத்துக்குமார், உதயகுமார் ஆகியோர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து திருவாரூர் மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 5, 2026
திருவாரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 5, 2026
திருவாரூர்: காா் மோதி பெண் பலி-ஒருவர் கைது

பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி கயல்விழி. இவர், நேற்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரவாக்கோட்டை போலீசார் பீட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


