News April 14, 2025

சபரிமலையில் இன்று விஷு கனி தரிசனம்!

image

தமிழகத்தை போலவே கேரளாவிலும் இன்று புத்தாண்டு பிறந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. விஷு கனி தரிசனத்திற்கு பின் கோயில் தந்திரியும், மேல்சாந்தியும் கை நீட்டமாக நாணயங்களை வழங்கினர். இதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏப்.18 ஆம் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறந்திருக்கும்.

Similar News

News January 22, 2026

வெந்தய நீரை எப்படி அருந்துவது சிறந்தது?

image

செரிமான கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கு வெந்தயம் இயற்கையான தீர்வு அளிக்கிறது. ஆனால், அதனை ஊறவைத்து பருகுவதா அல்லது கொதிக்க வைத்து குடிப்பதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தினசரி உடல் ஆரோக்கியத்துக்கும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் ஊறவைத்த நீரே சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள். சளி, இருமல், நச்சுகளை போக்க கொதிக்க வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும். SHARE IT!

News January 22, 2026

சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

image

வரும் ஜன.25-ல் விஜய் தலைமையில் தவெகவின் மாநில, மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என பொ.செ., புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

ஷிவம் துபேவின் Hair Style-ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

image

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவின் பேட்டிங், பவுலிங்கைவிட ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. அவரது ஹேர் ஸ்டைல்தான். அவரின் புதிய ஹேர் ஸ்டைலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை நெட்டிசன்கள் SM-ல் பகிர்ந்து வருகின்றனர். Moms favorite hair style, ஹிட்லர் ஸ்டைல் என துபேவை வைத்து பலரும் விளையாடி வருகின்றனர். அவரின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க…

error: Content is protected !!