News April 14, 2025
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு.. அல்லாடும் முதியோர்

ரேஷன் அட்டைகளில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகிறது. முன்பு பயோமெட்ரிக் பதிவு 40% உறுதியானால் போதும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 90% ஆக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முதியோர் பலர் கைவிரல் ரேகை தேய்ந்த நிலையில், பயோமெட்ரிக் பதிவாகாமல் அல்லாடுகின்றனர். பலர் 30 நிமிட நேரம் வரை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கவனிக்குமா அரசு?
Similar News
News April 18, 2025
சிலியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சிலியின் வடக்குப் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 178 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். சமீப காலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தினசரி நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படுவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
News April 18, 2025
வெள்ளிக்கிழமையில் அருள் தரும் அம்பாள் மந்திரம்..!

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினம், குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க இந்த அம்பாள் மந்திரத்தை சொல்லுங்க.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!
News April 18, 2025
சீனாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!

அமெரிக்கா – சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. 245% அளவுக்கு வரியை விதித்ததால், ஆவேசத்தில் உள்ள சீனா, இனி அமெரிக்காவை கண்டுகொள்ளப் போவதில்லை என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், சீன அதிகாரிகள் தன்னை சந்திக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி நாடுகளை போல சீனாவும் வரி ஒப்பந்தம் குறித்து தன்னிடம் பேச விரும்புகிறது என கூறியுள்ளார்.