News April 14, 2025
திமுக ஏஜென்டுகள்.. விளாசிய நயினார் நாகேந்திரன்

அதிமுக-பாஜக கூட்டணியை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பொருந்தாக் கூட்டணி என்று விமர்சிக்கின்றன. இதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என திமுக ஏஜென்டுகள் விமர்சிப்பதாகவும், ஆனால் உண்மையில் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான் என்றும் கூறியுள்ளார். திமுக அரசை ஆட்சியை விட்டு அகற்றப் போகும் கூட்டணியும் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 19, 2026
நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது: கில்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தாங்கள் விளையாடிய விதம் சற்று ஏமாற்றமளித்தாக இந்திய கேப்டன் கில் கூறியுள்ளார். நாங்கள் சில விஷயங்களை சிந்தித்து மேம்படுத்த வேண்டும் என்று பேசிய கில், விராட் கோலி மற்றும் 8-வது இடத்தில் கலக்கிய ஹர்ஷித் ஆகியோரின் பேட்டிங்கை பாராட்டினார். மேலும், இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
News January 19, 2026
ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 50,98,474 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 63,25,211-ஐ இது 24.1% அதிகம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வாகனங்களில் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவற்றில், மாருதி சுசுகி 3.95 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.
News January 19, 2026
கிரீன்லாந்தில் டிரம்புக்கு எதிராக பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினர். கிரீன்லாந்து மட்டுமின்றி டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் டிரம்பின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


