News April 14, 2025
இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Similar News
News April 18, 2025
ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News April 17, 2025
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கு விசாரணை இன்று (ஏப்.17) நடைபெற்றது. இதில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது.
News April 17, 2025
நெல்லை: கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் மேளா அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தலைமையகம் மற்றும் 17 கிளைகளில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் மேளா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி கொக்கரகுளம் ரோஸ் மஹாலில், 22 ஆம் தேதி வள்ளியூர் எம் எஸ் மகாலில், 24 ஆம் தேதி அம்பை அரோமா பள்ளியில் நடக்கிறது.