News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News September 14, 2025
ஜீன்ஸ் பேண்ட் விஷயத்துல இந்த தவற பண்ணாதீங்க..

ஜீன்ஸ் பேண்ட், பல ஆடைகளுடன் சூட் ஆகும் என்பதால் தினமும் இதனை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால், இதை 1 முறை பயன்படுத்திய உடனேயே துவைக்க போடும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜீன்ஸை, 4-5 முறை அணிந்த பிறகு துவைத்தாலே போதுமானது என்கிறார்கள். துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மட்டும் விரைவில் துவைக்கலாம். இப்படி செய்வதால் தண்ணீரும் அதிகம் செலவாகாது.
News September 14, 2025
INDvsPAK போட்டியை யாரும் பாக்காதீங்க..

INDvsPAK போட்டி இன்று நடைபெறும் சூழலில், இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி வலியுறுத்தியுள்ளார். டிவியில் கூட இப்போட்டியை பார்க்காதீர்கள் என கூறிய அவர், BCCI-க்கு கொஞ்சமும் கருணை இல்லை என விமர்சித்தார். மேலும், 1- 2 வீரர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் நாட்டிற்காக நின்றிருக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 14, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் விலை இன்று(செப்.14) கிலோவுக்கு ₹6 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹121-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டை 5 ரூபாய் 15 காசுகளுக்கும், சென்னையில் 5 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ₹140-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ சிக்கன் எவ்வளவு? கமெண்ட்ல சொல்லுங்க.