News April 14, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் வெளியாகிவுள்ளது. ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்ணை அழைக்கலாம்.
Similar News
News April 18, 2025
துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.
News April 17, 2025
திருமண தடை நீங்க முக்கியமான கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அவர்களை அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர்.இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்,இதனால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம்நடைபெறும் சிறப்பும் உள்ளது. திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலை தேடும் திருப்பத்தூர் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.