News April 13, 2025
இனி அந்த விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன்: சமந்தா

முதலில் தனக்கு பிடித்த விளம்பரங்களில் நடித்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். இனி மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும், டாக்டர்களால் உறுதிசெய்யப்படும் விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 15 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
12-வது போதும்.. ரயில்வேயில் ₹35,400 சம்பளம்!

RRB-ல் காலியாக உள்ள Lab Assistant Gr. III, Senior Publicity Inspector உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◆12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ◆வயது: 18 – 40 ◆சம்பளம்: ₹19,900 – 44,900 வரை ◆தேர்ச்சி முறை: கணினி வழித் தேர்வு, Performance Test ◆இதற்கு வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க இங்கே <
News January 23, 2026
ஜன நாயகன்.. காலையிலேயே இனிப்பான செய்தி

‘ஜன நாயகன்’ சென்சார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, கடந்த ஜன.20-ல் சென்னை HC அமர்வு ஒத்திவைத்தது. இந்நிலையில், ஜன.27-ல் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பிப்ரவரி கடைசி வாரம் (அ) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகலாம் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 23, 2026
தேமுதிக கூட்டணி சேராததற்கு இதுதான் காரணமா?

தேமுதிக எந்த கூட்டணியிலும் இடம்பெறாததற்கு பிரேமலதா போடும் டீல் தான் காரணம் என பேசப்படுகிறது. அதாவது கூட்டணிக்காக திமுக, அதிமுகவை அணுகும் பிரேமலதா, 21 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் & 1 மத்திய அமைச்சர் சீட்டை கேட்கிறதாம். இந்த லிஸ்ட் பெரிதாக இருப்பதால் திமுகவும், அதிமுகவும் தயங்குவதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர். தற்போதைக்கு, 7 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


