News April 13, 2025
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, காேவை, விருதுநகரில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News December 26, 2025
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாக்கிறது: PM மோடி

சுதந்திரத்திற்கு பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்.,ஐ PM மோடி மறைமுகமாக சாடியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட பழைய அமைப்பிலிருந்து இந்தியாவை பாஜக மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அம்பேத்கரின் மரபை அழிப்பதில் காங்., சமாஜ்வாதி கட்சிகள் பாவம் செய்ததாக கூறிய மோடி, அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது என்றார்.
News December 26, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
*உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
*சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
*இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.
News December 26, 2025
புதின் அழிந்து போகட்டும்: ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் நாளான இன்று நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும் தான் இருக்கிறது, அது புதின் அழிந்து போகட்டும் என்பதுதான் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸை ஒட்டி அவர் வெளியிட்ட வீடியோவில், புதின் அழிய வேண்டும் என்பதை விட பெரிய வேண்டுதலை கடவுளிடம் கேட்கிறோம், அது உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் என்றும் கூறியுள்ளார்.


