News April 13, 2025
பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
வரலாற்றில் இன்று

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது. 1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
News July 6, 2025
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ்.. MH-ல் புதிய வரலாறு!

2006-ல் சிவசேனாவில் இருந்து விலகி MHS-யை தொடங்கிய ராஜ் தாக்கரே மீண்டும் உத்தவ் தாக்கரே(UBT) உடன் இணைந்துள்ளார். மராட்டியத்தில் இந்தி மொழி திணிப்புக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முழக்கத்தோடு கைகோர்த்திருக்கும் இருவரும் மும்பை மாநகராட்சிக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் சேர்ந்து களம் காண உள்ளனராம். இது, அங்கு ஆளும் பாஜக அரசுக்கு சற்று அதிர்ச்சியும், சிவசேனாவினருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
News July 6, 2025
போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் தகவல்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன – அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் என்றார்.