News April 13, 2025
திருமண தடை நீக்கும் வள்ளிமலை முருகன்

காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனை கணவனாக அடைய வள்ளி இங்கு வழிபட்டதால், திருமணமாகாத பெண்கள் இங்குள்ள சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் வள்ளிமலை முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 20, 2026
வேலூருக்கு விஜய் வருகை; இது தான் RULES!

வேலூரில் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. அகரம்செரியில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த சந்திப்பில் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே QR கோடு கொண்ட அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மேலும் காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளுடன் மைதானத்தில் 5,000 நாற்காலிகள், மேற்கூரை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
News February 20, 2026
வேலூரில் அரங்கேறிய கொடூரம்!

வேலூரில் தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி (17) வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இதையறிந்த பாட்டி வேலூர் கஸ்பாவை சேர்ந்த உறவினர் மீரா மொய்தீன் (35) வீட்டில் தங்க வைத்தார். கடந்த 15-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த மொய்தீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அலறிய சிறுமியை உறவினர்கள் மீட்டனர். இந்த வழக்கில் நேற்று வேலூர் மகளிர் போலீசார் மொய்தீனை கைது செய்தனர்.
News February 20, 2026
வேலூர்: மயானத்தில் மலரும் மனிதநேயம் ❤️

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் (38). இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 2 ஆண், 1 பெண், என மொத்தம் 3 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முன் வந்தார். உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று, நேற்று (பிப்.19) வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து மாலைகள் உள்ளிட்ட இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார். SHARE IT!


