News April 13, 2025
விருதுநகர் மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News April 17, 2025
விருதுநகரில் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்களிடமிருந்து கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிப்படப்ப கூடிய வரையில் இருக்க வேண்டும். இதில், சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பண முடிப்பு வழங்கப்படும். பாடலை tncu08@gmail.com மின்னஞ்சலில் மே 30க்குள் அனுப்ப வேண்டும்.
News April 17, 2025
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவி கோபுரம்

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.