News April 13, 2025

ரேஷன் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

image

ரேஷன் கடைகளுக்கு இந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை. நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை தினம் என்பதால், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. இதுபோல் வருகிற 18ம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படவுள்ளது. இதனால் அன்றைய தினமும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. எனவே ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படவும். ஏமாந்து விட வேண்டாம்.

Similar News

News April 16, 2025

IPL பவுலர்களுக்கு செம்ம சான்ஸ்.. ரோஹித் உறுதி

image

ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்களை மட்டுமே வீசினாலும், அதுதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாக ரோஹித் தெரிவித்துள்ளார். ENG-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஐபிஎல் பவுலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், பும்ரா, ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார். IND vs ENG மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜூன் 20-ல் தொடங்குகிறது.

News April 16, 2025

நடிகையின் கல்யாண VIBE போட்டோக்கள்

image

நடிகை அபிநயா, தனது நீண்ட நாள் காதலன் வேகசேனா கார்த்திக்கை கரம்பிடித்தார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் படத்திலும் அபிநயா ஹிட் கொடுத்து கவனம் பெற்றுள்ளார்.

News April 16, 2025

விஜய்க்கு எதிராக ஃபத்வா

image

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து ஃபத்வா வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழக இஸ்லாமியர்கள் விஜய்யிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குடிகாரர்கள் மற்றும் சூதாடுபவர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்து, விஜய் பாவம் செய்துவிட்டதாக ஜமாத் குறிப்பிட்டுள்ளது. மேலும், விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!