News April 13, 2025
உடனே வெளியேறுங்க.. டிரம்ப் நிர்வாகம் புது உத்தரவு

USA-ல் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர் உடனே வெளியேற வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. X பக்கத்தில் USA உள்துறை வெளியிட்டுள்ள பதிவில், 30 நாள்களுக்கு மேல் USA-ல் தங்கியிருப்போர் அரசிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த உத்தரவு, H-1 B விசா, மாணவர் விசா பெற்று USA-ல் தங்கியிருப்போருக்கு பொருந்தாது.
Similar News
News April 17, 2025
குற்றஞ்சாட்டிய பாடகருக்கு ARR கொடுத்த ரியாக்ஷன்

கலைஞர்களுக்கு சான்ஸ் கொடுக்காமல், டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய பாடகர் அபிஜித் மீது வருத்தமில்லை என ARR தெரிவித்துள்ளார். அபிஜித் மீது எந்த வெறுப்பும் இல்லை எனவும், அனைத்திற்கும் தன்னை குற்றஞ்சாட்டுவதும் கூட நன்றாகத் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘சவ்வா’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் 100 கலைஞர்களுக்கும் மேல் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
ராசி பலன்கள் (17.04.2025)

➤மேஷம் – லாபம் ➤ரிஷபம் – பணிவு ➤மிதுனம் – இரக்கம் ➤கடகம் – பெருமை ➤சிம்மம் – பாசம் ➤கன்னி – உதவி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – பகை ➤தனுசு – சினம் ➤மகரம் – நோய் ➤கும்பம் – ஆக்கம் ➤மீனம் – தடங்கல்.
News April 17, 2025
இசைக்கு வந்த சோதனை… செயலிழந்த Spotify..

பாடல்களை உள்ளடக்கிய Spotify தளம் உலகளவில் செயலிழந்ததால் பயனர்கள் சிக்கலை சந்தித்தனர். செல்போன், டெஸ்க்டாப் என அனைத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் மட்டும் சரியாக பிளே ஆகும் நிலையில், செயலியின் மற்ற பயன்பாடுகள் தடைபட்டுள்ளது. பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Spotify தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க Spotify வேலை செய்யுதா?