News April 13, 2025
திருவாரூரில் அருள்பாலிக்கும் என்கண் முருகன் கோயில்

திருவாரூரில் புகழ்பெற்ற என்கண் முருகன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 9, 2026
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
திருவாரூர்: தலை நசுங்கி பெண் பலி

நாகை மாவட்டம், துளசாபுரத்தை சேர்ந்த நடராஜன் (68). இவர் நேற்று மதியம் தனது மனைவி கலைச்செல்வியுடன் (65) டூவீலரில் திருத்துறைப்பூண்டி அருகே இ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் கலைச்செவியின் தலையில் பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 9, 2026
திருவாரூர்: மனைவியிடம் அத்துமீறியவர் அடித்து கொலை

திருவாரூர் மாவட்டம், கர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (37). ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்த இவரிடம் அருள்தாஸ் (40) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசன் மனைவிக்கு அருள்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கலையரசன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அருள்தாசை தலையில் அடித்ததில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் அவரை கைது செய்தனர்.


