News April 13, 2025
தீராத நோய் தீர்க்கும் கந்தர்மலை முருகன் கோவில்

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. நாளை தமிழ் புத்தாண்டுடை ஒட்டி இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 19, 2025
கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஆதிதிராவிடர் வீட்டு வசதி & மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சைக்குத்துதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 8th முதல் 12th வரை படித்து, 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பங்களின் அருகில் நிற்பதையோ கீழே கிடக்கும் மின் கம்பிகளின் அருகே செல்வதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் மற்றும் இடி மின்னல் நேரத்தில் வீட்டில் உள்ள அதிக மின் திறன் கொண்ட மின்சார உபகரண பொருட்களை அனைத்து வைக்கும் வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (18.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.