News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
Similar News
News December 18, 2025
EPS-க்கு அதிர்ச்சி கொடுக்க ரெடியாகும் KAS

ஈரோட்டில் இன்று தவெக பரப்புரை கூட்டம் மிகப்பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் 30 நிமிடங்களுக்கு மேல் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனது தொடர்பில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து, EPS-க்கு அதிர்ச்சி கொடுக்க KAS திட்டமிட்டுள்ளாராம்.
News December 18, 2025
கடும் நெருக்கடியில் தமிழக ஏற்றுமதி துறை: CM கடிதம்

USA வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதால், இதற்கு விரைவில் தீர்வு காண அவர் கோரியுள்ளார்.
News December 18, 2025
நத்தைகளால் மூளைக்காய்ச்சல்: டாக்டர்கள் எச்சரிக்கை

மழை, குளிர் காலங்களில் நத்தைகள் மூலமாக மூளைக்காய்ச்சல் பரவக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட நத்தைகளை தொட்டால் நமக்கும் அந்த பாதிப்பு பரவிவிடுகிறது. காய்ச்சல், கழுத்துவலி, மயக்கம், குமட்டல், மூர்ச்சை நிலையை தொடர்ந்து மூளைக்காய்ச்சல் உருவாகலாம் என கூறும் டாக்டர்கள், எனவே நத்தைகளை கை, கால்களால் தொட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.


