News April 13, 2025
FD வட்டியை குறைத்த SBI.. எவ்வளவு தெரியுமா?

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்ததையடுத்து, பல்வேறு வங்கிகளும்<<16079100>> கடன்கள்<<>> மீதான வட்டியை குறைத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, FD திட்டம் மீதான வட்டியை 15ம் தேதி முதல் 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, 1 முதல் மூன்றரை ஆண்டுகாலம் வரை ரூ.3 கோடிக்கும் குறைந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.
Similar News
News October 20, 2025
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்

அஜித்குமாருடன் நடிக்க ஆசைப்படுவதாக வித்யூத் ஜம்வால் தெரிவித்துள்ளார். ‘பில்லா 2’ படத்திலேயே தன்னை அஜித் பாராட்டியதாகவும், அப்போது, தான் 2-ம் கட்ட நடிகர் தான் என்றும் நெகிழ்ந்துள்ளார். மேலும், அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார். ‘பில்லா 2’ படத்தில் திம்த்ரி என்ற ரோலில் நடித்த வித்யூத், ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். ‘மதராஸி’-யில் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார்.
News October 20, 2025
தீபாவளிக்கு உண்மையில் யாரை வழிபடணும்?

தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டு, சாமியை வணங்கி பூஜை போட்டுவிடுகிறோம். ஆனால் உண்மையில் தீபாவளியன்று முன்னோர்களைதான் வணங்க வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. தீபாவளிக்கு முன்னோர்களை அழைத்து, விருந்தளித்து, சாந்தப்படுத்த வேண்டும். கார்த்திகை தீபத்தன்று பட்டாசு வெடித்து அவர்களை வழியனுப்பணும். இப்பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளதாம். ஆனால், தற்போது சிலர் மட்டுமே இதை கடைபிடிக்கின்றனர்.
News October 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிச.15-ல் பணம் கிடைக்கும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள், செல்போன் எண், ஆதார், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்படவுள்ளன.